செயற்கை பூக்கள் தயாரிப்பது எப்படி : சென்னையில் பெண்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புக்கள். : திருமதி செல்வராணி சரவணன் தொலைபேசி : +91-9884861088, 9551678787
நம் வீட்டிற்க்கு தேவையான அலங்காரப்பூக்கள் நாமே தயாரித்து பயன்பெறலாம். அது மட்டும் இன்றி இதற்கு அலங்கார பொருட்கள் சந்தையில் வரவேற்ப்பு மிக அதிகம். கைவினை பொருட்களின் மகிமை அனைவரும் அறிந்ததே. நாமே தயாரித்து நம் அன்புக்குரியவர்களுக்கு கொடுக்கும் நினைவு பரிசு மிக்க மகிழ்ச்சியையும் மனநிறைவையும் ஏற்படுத்தும். காண்பதற்கு உண்மை ரோஜா போன்றே காட்சியளிக்கும் ரோஜா மலர்களை சில நிமிடங்களில் நாமே தயாரித்து விடலாம்.
பங்கு பெற விரும்பும் பெண்கள் திருமதி செல்வராணி சரவணன் அவர்களை அணுகலாம் :
முகவரி :
எண் : 8/13 முகப்பேர் மேற்கு, சென்னை - 600037
தொலைபேசி : +91-9884861088, 9551678787
இயற்கையான பூக்களால் தயார்செய்யபடும் 'பொக்கே' எனப்படும் பூ செண்டுக்களின் ஆயுள், சில மணிநேரத்தில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக நமது இல்லத்தை அலங்கரிக்கும் வகையில் தயார்செய்யபடும் செயற்கை மலர் "பொக்கே"க்களுக்கு வரவேற்பு கூடுதலாயுள்ளது. செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேக்களை தயாரித்து விற்பது லாபகரமானது என்று கூறுகிறார் கோவை இருட்டுபள்ளத்தில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் ஆண்கள் மூளைவளர்ச்சி குன்றியோர் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகி நசீமா. அவர் கூறியதாவது: மூளை வளர்ச்சி குன்றியோருக்கு தொழிற்பயிற்சி அளித்து வருகிறேன். அவர்களை கொண்டு செயற்கை பொக்கே, பிளவர் வாஷ், பேனா ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றை பல்வேறு நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் வாங்கி செல்கின்றன.
செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேயை யார் வேண்டுமானாலும் எளிதாக தயாரிக்கலாம். காதலர் தினம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நல்ல கிராக்கி உள்ளது. காதல் ஜோடிகள் சிவப்பு ரோஜா, நெருங்கிய நண்பர்கள் பிங்க் ரோஜா பொக்கேக்களை அதிகம் வாங்குகின்றனர்.
அந்த தினங் களுக்கு ஏற்ப தயாரித்து விற்கலாம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே ஓய்வு நேரங்களில் செய்வதற்கு ஏற்ற தொழில் இது. வீட்டிலுள்ள பெண்கள் கூட்டாக சேர்ந்து ஒருவர் பூ தயாரித்து, மற்றொருவர் கோன் தயாரித்து, இன்னொருவர் பொக்கேவை முழுமைப்படுத்தினால் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செய்யலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் பெண்களை சுயசார்புள்ளவர்களாக மாற்றும்.
Visit : https://www.chennaifashioninstitute.com
Visit : https://www.chennaifashioninstitute.com